Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 8, 2009

ஐ.ஐ.டி., அதிகாரிகளால் கொழிக்குது பொருளாதார வளம்:நாட்டின் வளர்ச்சியில் 20 லட்சம் கோடி ரூபாய் அதிகரிப்பு: தினமலர்

ஐ.ஐ.டி., அதிகாரிகளால் கொழிக்குது பொருளாதார வளம்:நாட்டின் வளர்ச்சியில் 20 லட்சம் கோடி ரூபாய் அதிகரிப்பு: தினமலர்: "ஐ.ஐ.டி., அதிகாரிகளால் கொழிக்குது பொருளாதார வளம்:நாட்டின் வளர்ச்சியில் 20 லட்சம் கோடி ரூபாய் அதிகரிப்பு

ஜனவரி 08,2009,00:00 IST

மும்பை: நாட்டில் உள்ள ஒவ்வொரு ஐ.ஐ.டி., நிறுவனங்களுக்கும் அரசு செலவிடும் தொகையில் ஒரு ரூபாய்க்கு, 15 ரூபாய் பொருளாதார வளர்ச்சி கிடைத்து வருகிறது. கடந்த 58 ஆண்டுகளாக நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., நிறுவனங்களுக்கு அரசு செலவிட்ட தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை. ஆனால், ஐ.ஐ. டி.,க்களில் படிப்பை முடித்து, முக்கிய பதவியிடங்களை வகிப் பவர்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 20 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.ஐ.ஐ.டி., பழைய மாணவர்கள் ஏற்படுத்திய தாக்கம் - 2008 என்ற இடைக்கால அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


பான் ஐ.ஐ.டி., என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள, இந்தியாவின் ஏழு ஐ.ஐ.டி., நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப் பின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது.ஐ.ஐ.டி.,யில் படிப்பை முடித்து, முக்கிய பதவியிடங்களில் பணியாற்றும் இரண்டு லட்சம் பேர்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 20 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இவர்கள் தொழில் துறை, அரசு அமைப்புகள், தொழில் முனைவோர் துறை போன்றவற்றில், 50 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.ஐ.ஐ.டி., அதிகாரிகளால், இதுவரை இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல். அதாவது, ஒவ்வொரு ஐ.ஐ.டி., அதிகாரிகளாலும், 100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.


கடந்த 58 ஆண்டுகளாக ஐ.ஐ.டி.,க்களுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை குறைந்த பட்சம் 20 ஆயிரம் கோடி ரூபாய்; அதிக பட்சம் 40 ஆயிரம் கோடி ரூபாய். ஐ.ஐ.டி.,க்களுக்கு அரசு செலவிட்ட ஒவ்வொரு ரூபாயும், 15 ரூபாய்களாக வளர்ச்சி பெற்றுள்ளன.கோரக்பூர் ஐ.ஐ.டி.,யில் 1956ம் ஆண்டு முதல் கட்டமாக படிப்பை முடித்த ஐ.ஐ.டி., பட்டதாரிகள், இன்னும் நம்மால், தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன திட்டங்களை நடைமுறைப் படுத்த முடியும் என்று விவாதித்து வருகின்றனர்.ஐ.ஐ.டி.,யில் படிப்பை முடித்த பழைய மாணவர்களில் 40 சதவீதம் பேர் இளங்கலை படிப்புடன் முடித்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 60 சதவீதம் பேர் முதுகலைப் படிப்பை முடித்துள்ளனர்.


கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் ஐ.ஐ.டி., முடித்த மாணவர்களில், 10ல் நான்கு பேர் தலைமை மேலாண்மை நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர். இவர்கள் பல்வேறு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு ஏஜென்சிகள், அரசியல் மற்றும் தொழில்துறை தலைவர்களாக பதவி வகிக்கின்றனர். இவர்களில், 10 பேரில் ஏழு பேர், தற்போது இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர். 10 பேரில் இருவர், வெளிநாடுகளில் தங்களின் பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பி, தங்களின் பணியை தொடர்கின்றனர்.


தொழில் துறை மற்றும் அரசு துறையில் மூத்த பதவியிடங்களில் உள்ள ஐ.ஐ.டி., அதிகாரிகளால், ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 54 சதவீதம், இயக்குனர்கள் குழுவில் குறைந்தபட்சம் ஒரு ஐ.ஐ.டி., அதிகாரியை கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களை விட குறைந்த பட்சம் 10 மடங்கு கூடுதல் வருவாய் பெறுகின்றன. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது."

No comments: