Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, January 12, 2009

கோவையில் பார்வையாளர்களை அசத்திய செல்லப் பிராணிகள் : ஆக்ரோஷமான 'மாசிப்' நாய்களும் பங்கேற்பு: தினமலர்

கோவையில் பார்வையாளர்களை அசத்திய செல்லப் பிராணிகள் : ஆக்ரோஷமான 'மாசிப்' நாய்களும் பங்கேற்பு: தினமலர்: "கோவையில் பார்வையாளர்களை அசத்திய செல்லப் பிராணிகள் : ஆக்ரோஷமான 'மாசிப்' நாய்களும் பங்கேற்பு

ஜனவரி 12,2009,00:00 IST

கோவை : கோவையில் நடந்த செல்லப் பிராணிகள் கண்காட்சியில், பல்வேறு வகையான நாய், பூனை, குதிரை, வாத்து, கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகள் பங்கேற்று பார்வையாளர்களை அசத்தின. 'செல்ல வளர்ப்புப் பிராணி பிரியர்கள் சங்கம்' சார்பில், கோவை, சாய்பாபா காலனி, ராமலிங்க செட்டியார் உயர்நிலைப்பள்ளியில், செல்லப் பிராணிகள் கண்காட்சி நேற்று நடந்தது. இதற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.


தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல்வேறு வகையான நாய், பூனை, குதிரை, வாத்து, கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றன. கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், ராட்வீலர், கெரேடன், பக் நாய்களுடன், அரிய வகையாகக் கருதப்படும் பேசட் ஹொவுண்டு, திபெத்தியன் டெரியர், ஐஸ் செட்டர் நாய்களும் பங்கேற்றன. மிக அரிய வகையான பிரேசிலைச் சேர்ந்த பிலா, மாசிப் நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றன. மிகவும் ஆக்ரோஷம் கொண்ட நாயான 'மாசிப்' நாய்களை வளர்க்க, பல நாடுகளில் தடை உள்ளது; இந்தியாவில் இவ்வகை நாய்களை வளர்க்க தடை இல்லை. பறவைப் பிரிவில், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து பறவைகள் இடம் பெற்றிருந்தன. ஒரு பறவையின் விலை 50,000 ரூபாய்.


இக்கண்காட்சியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட பஞ்சவர்ண கிளியின் விலை இரண்டு லட்சம் ரூபாய். கோழிகளில் சண்டைக் கோழிகளும், பேன்சி ரக கோழிகளும் இடம் பெற்றன. பல வகையான ஆடு, குதிரைகளும் இருந்தன. அரிய வகை இனமாகக் கருதப்படும் பெர்சியன் பூனைக்குட்டிகள், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. விலை உயர்ந்த பெர்சியன் பூனைகள், இத்தாலி நாட்டில் அதிகம் காணப்படுபவை; லண்டனில், 'லாங் ஹேர்' பூனை என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன."

No comments: