Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, January 12, 2009

தேர்தலை வாக்காளர்களே ரத்து செய்ய முடியுமா?: தினமலர்

தேர்தலை வாக்காளர்களே ரத்து செய்ய முடியுமா?: தினமலர்: "தேர்தலை வாக்காளர்களே ரத்து செய்ய முடியுமா?

ஜனவரி 12,2009,00:00 IST

புதுடில்லி : தேர்தல்களை நடத்துவதில் பல சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்; ஊழல் அரசியல்வாதிகளை தேர்தலில் இருந்து நீக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை பொதுமக்களும், பொதுநலத்தொண்டு அமைப்புகளும் கோரி வருகின்றன. இது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு ஏகப்பட்ட மனுக்களும் குவிந்துள்ளன.


சமீபத்தில், டில்லியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர், தகவல் உரிமை சட்டத்தின் படி மனு செய்தார். 'தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள எந்த வேட்பாளரையும் தேர்வு செய்ய விரும்பவில்லை என்று வாக்காளர் விரும்பினால், அவருக்கு வசதியாக ஓட்டுச்சீட்டில், 'யாருக்கும் ஓட்டில்லை' என்று தனிக்கட்டத்தை ஏற்படுத்த வேண்டும்; இதை கமிஷன் செயல்படுத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?' என்று மனுவில் கேட்டிருந்தார். தகவல் உரிமை சட்டப்படி மனு செய்த ஒரு மாதத்துக்குள் , நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு பதில் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். பதில் தராமல் அதிகாரிகள் தாமதப்படுத்தவோ, தப்பிக்கவோ முடியாது. இந்நிலையில், மனுதாரருக்கு தேர்தல் கமிஷன் பதில் அனுப்பியுள்ளது. 'வேட்பாளர்கள் யாரையும் விரும்பாவிட்டால், ஓட்டளிக்க விருப்பமில்லை அல்லது, யாருக்கும் ஓட்டில்லை என்ற தனி கட்டத்தை ஓட்டுச்சீட்டில் போடலாமா என்பது குறித்து மத்திய அரசின் கருத்தை கேட்டுள்ளோம்' என்று கமிஷன் பதில் அளித்தது.


தொகுதிக்கு எந்த பணியையும் ஆற்றாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை பல நாடுகளில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், உள்ளூர் வார்டு உறுப்பினரை திரும்ப அழைக்க உள்ளூர் மக்கள் விரும்பினாலும் ஓட்டெடுப்பு நடத்தி அவரை நீக்கி விடலாம். இதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள், இந்தியாவில் அமலானால், வாக்காளர்களுக்கு பல வசதிகள் ஏற்படும். தொகுதிக்கே வராத எம்.பி., -எம்.எல்.ஏ.,வை வாபஸ் பெற வழி ஏற்படும். அதுபோல, ஒரு தொகுதியில், அதிக அளவில் 'யாருக்கும் ஓட்டில்லை' என்று பதிவானால், அந்த தொகுதி தேர்தலை ரத்து செய்யவும் வேண்டிய நிலை வரும்."

No comments: