Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Wednesday, January 7, 2009

உலக கோப்பை வெல்ல முடியுமா? : கிரிக்கெட்டுக்கு ஹாக்கி சவால்: தினமலர்

உலக கோப்பை வெல்ல முடியுமா? : கிரிக்கெட்டுக்கு ஹாக்கி சவால்: தினமலர்: "உலக கோப்பை வெல்ல முடியுமா? : கிரிக்கெட்டுக்கு ஹாக்கி சவால்

ஜனவரி 07,2009,00:00 IST

புதுடில்லி: தேசிய விளையாட்டு தொடர்பான விவாதம் சூடு பிடித்துள்ளது. 8 முறை உலக கோப்பை வென்ற பிறகு,தேசிய விளையாட்டுக்கு கிரிக்கெட் உரிமை கொண்டாடலாம் என முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்ஜித் சிங் செய்னி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கும் ஹாக் கியை நீக்கிவிட்டு, கிரிக் கெட்டுக்கு தேசிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டோடி வலியுறுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பல்ஜித் சிங் செய்னி கூறுகையில்,''ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இன்னும் இடம் பெறவே இல்லை. அதனால் முதலில் 8 முறை உலககோப் பையை கிரிக்கெட் வெல் லட்டும். பிறகு வேண்டுமானால் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்கலாம். இப்போது ஹாக்கி மோசமான நிலையில் இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் விரைவில் நல்ல நிலைக்கு வந்துவிடும்,'' என்றார்.


அங்கீகாரம் இல்லை: முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான வாசுதேவன் பாஸ்கரன் கூறுகையில்,''தேசிய விளையாட்டாக இருந்தும் ஹாக்கிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த 1982, டில்லி ஆசிய கோப்பை போட்டிக்கு முன்புவரை நாம் புல்தரையில் தான் விளையாடினோம். அப்போது நம்மிடம் செயற்கை இழையிலான தளம் ஒன்றுகூட இல்லை. இருப்பினும் 8 ஒலிம்பிக் தங்கம் வென்றோம். 10, 12 அல்லது 20 நாடுகளில் விளையாடப்படும் கிரிக் கெட் இன்னும் ஒலிம் பிக்கில் நுழையவில்லை. ஆனாலும் வர்த்தக ரீதியில் சிறப்பாக செயல்படுவதால் தான் கிரிக்கெட் மோகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. மக்களின் ஆர்வமும், ஆதரவும், நவீன வசதியும் உள்ளது. இவை எல்லாம் உண்மையில் ஹாக்கிக்கு தான் கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார். ஹாக்கி வீரர் பல்ஜித்சிங் தில்லான் கூறுகையில்,'' பட்டோடியின் பேச்சு எனக்கு வியப்பு அளிக்கிறது. கிரிக்கெட் அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


'நம்பர்-1' அணியாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் போதிய வசதிகள் இல்லாத காலத்திலேயே இந்திய ஹாக்கி அணி 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது. இந்தியாவுக்கு பல மறக்க முடியாத தருணங்களை ஹாக்கி பெற்றுத்தந்துள்ளது,'' என்றார்.


கில் ஆதரவு: முன்னாள் ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் கே.பி.எஸ்.கில்., கூறுகையில்,'' ஹாக்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் 8 அல்லது 10 நாடுகளில் தான் விளையாடப்படுகிறது. ஒலிம்பிக்கில் ஹாக்கி உள்ளது. ஆனால் கிரிக்கெட் இல்லை. யாரும் கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் சிறந்த உடல்திறன் உள்ளவர்கள் மட்டுமே ஹாக்கி விளையாட முடியும். ஹாக்கிதான் தேசிய விளையாட்டாக தொடர வேண்டும்,'' என்றார்."

No comments: