பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு வழிபாடு: தினமலர்: "பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு வழிபாடு
ஜனவரி 02,2009,00:00 IST
திருப்புத்தூர் : புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை முடிந்தவுடன், பக்தர்கள் தரிசனம் துவங்கியது. மூலவர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளினர்.
'மெட்டல் டிடக்டர்' சோதனைக்கு பின் கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உச்சி காலை பூஜையில் சிறப்பு வழிபாடு நடந்தது. அறங்காவலர்கள் காரைக்குடி பழ.சிதம்பரம், நற்சாந்துபட்டி மெ.குமரப்பன் ஏற்பாடுகளை செய்தனர்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, January 2, 2009
பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு வழிபாடு: தினமலர்
Posted by
Arul
at
Friday, January 02, 2009


No comments:
Post a Comment