நாகை - வேளாங்கண்ணி இடையே அகல ரயில் பாதை பணி 'சுறு சுறு': தினமலர்: "நாகை - வேளாங்கண்ணி இடையே அகல ரயில் பாதை பணி 'சுறு சுறு'
ஜனவரி 02,2009,00:00 IST
நாகப்பட்டினம் : நாகூர் - திருவாரூர் அகல ரயில் பாதையில் பணிகள் முடிவடைந்த நிலையில் நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதை அமைக்கும் பணி சுறு சுறுப்பாக நடக்கிறது. நாகூர்-திருவாரூர் வரையிலான 31 கி.மீ., தூரம் அகல ரயில் பாதை பணிகள், 73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்து, விரைவில் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. தற்போது, நாகை - வேளாங்கண்ணி இடையிலான 10 கி.மீ., தூரம், புதிய அகல ரயில் பாதை பணிகள் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியுள்ளது.
வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து வடக்கு பொய்கை நல்லூர் வரை தண்டவாளம் அமைக்க, செம்மண் சாலை போடப்பட்டு வருகிறது. தண்டவாளங்கள், ஸ்லீப்பர் கட்டைகள், லாரி மூலம் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. வேளாங்கண்ணியில் புதிய ரயில்வே ஸ்டேஷன், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், பேராலய நிர்வாகம் சார்பில் கட்டித்தரப்பட்டுள்ளது. பணிகள், ஜூன் மாதத்திற்குள் முடிந்து ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, January 2, 2009
நாகை - வேளாங்கண்ணி இடையே அகல ரயில் பாதை பணி 'சுறு சுறு': தினமலர்
Posted by
Arul
at
Friday, January 02, 2009


No comments:
Post a Comment