Business News Headlines in Tamil - Yahoo! Tamil News: "சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 11:49 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று முற்பகல் 11.20 மணியளவில் சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 67 புள்ளிகள் உயர்வுடன் 9,070ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்வுடன் 10,110 ஆக காணப்பட்டது. பின்னர் அது முற்பகல் 11.20 மணிக்கு 167 புள்ளிகள் உயர்வுடன் 10,127 ஆக காணப்பட்டது.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 5 % உயர்ந்து காணப்பட்டன.மேலும் ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா பவர் ஆகியவை தலா 4 % உயர்ந்து காணப்பட்டன.ஸ்டெர்லைட் 3.8 %, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டரக்சர்,டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.
விப்ரோ 2.7 %, எஸ்பிஐ , ரிலையன்ஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் பார்தி ஏர்டெல், சத்யாம் ஆகியவை தலா 3.5 % சரிந்து காணப்பட்டன.இந்துஸ்தான் யுனிலீவர் 1 % சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 3,075 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)"
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, January 5, 2009
Business News Headlines in Tamil - Yahoo! Tamil News
Posted by
Arul
at
Monday, January 05, 2009


No comments:
Post a Comment