திருச்சி- மதுரை இடையே மின்சார ரயில் பாதை : கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்: தினமலர்: "திருச்சி- மதுரை இடையே மின்சார ரயில் பாதை : கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
ஜனவரி 12,2009,00:00 IST
வடமதுரை : திருச்சி- மதுரை இடையே ரயில் பாதையை மின்மயமாக்கும் பணியின் ஒருபகுதியாக கம்பங்கள் அமைக்கும் பணி அய்யலூர் பகுதியில் நடந்து வருகிறது. சென்னை- விழுப்புரம் இடையே மின்சார பாதை பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு விட்டது. தற்போது விழுப்புரம்-மதுரை வரையும், பின்னர் படிப்படியாக நாகர்கோயில், தூத்துக்குடி வரையிலும் மின்மயமாக்கப்பட உள்ளது. முதற் கட்டமாக விழுப்புரம்- திருச்சி இடையே கடந்த 2 ஆண்டுக்கு மேலாக நடைபெற்ற பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவது கட்டமாக திருச்சி- திண்டுக்கல்-மதுரை இடையே 160 கி.மீ., தூரத்திற்கு ரூ. 100 கோடி செலவில் மின்மயமாக்க பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் நிறுவுவதற்குரிய கான்கிரீட் கட்டுமான பணி முடிக்கப் பட்டது. தற்போது இவற்றில் மின்கம்பங்களை நிறுவும் பணி அய்யலூர் பகுதியில் நடந்து வருகிறது.சில ஆண்டுகளில் வரவுள்ள 2 வழிப்பாதையை கருத்தில் கொண்டு ஸ்டேஷன் பகுதிகளில் மட்டும் 4 பாதைகளுக்குரிய இடைவெளி விட்டு இருபுறமும் மின் கோபுரங்கள் நிறுவப்படுகிறது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, January 12, 2009
திருச்சி- மதுரை இடையே மின்சார ரயில் பாதை : கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்: தினமலர்
Posted by
Arul
at
Monday, January 12, 2009


No comments:
Post a Comment