விபத்தில் பலியான கல்லூரி மாணவியின் கண்கள் தானம்: தினமலர்: "விபத்தில் பலியான கல்லூரி மாணவியின் கண்கள் தானம்
ஜனவரி 08,2009,00:00 IST
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே விபத்தில் பலியான கல்லூரி மாணவியின் கண்கள், அவரது தந்தை விருப்பப்படி தானம் செய்யப்பட்டன. தூத்துக்குடி, பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனி கட்டட தொழிலாளி துரைராஜ் மகள் உமா ஜெயந்தி (19). நாகம்பட்டி மனோ கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5ம் தேதி மாலை 4.15 மணியளவில் கல்லூரி அருகே நடந்து வந்த அவர் மீது, பைக் மோதியதில் படுகாயமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மாலை 3.15 மணிக்கு உமா ஜெயந்தி இறந்துபோனார்.
கண்கள் தானம்: அவரது கண்களை தானம் செய்ய சம்மதம் தெரிவித்து, தந்தை துரைராஜ் அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., விஸ்வநாதனிடம் உறுதிமொழி கடிதம் கொடுத்தார். அதன்படி நேற்றிரவு உமா ஜெயந்தி உடலிலிருந்து கண்கள், டாக்டர்களால் எடுக்கப்பட்டுள்ளன. அவை நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. துரைராஜ் கூறுகையில்,' வீணாக மண்ணுக்குள் போகும் என் மகளுடைய கண்கள், பிறர் பார்வைக்காக பயன்படட்டும் என்பதால் தானம் செய்ய முழுசம்மதத்துடன் எழுதிக் கொடுத்தேன். அதன் மூலம் என் மகள் எப்போதும் உயிரோடு இருப்பதாக உணர்வேன்' என்றார்.
விழிப்புணர்வு அதிகரிப்பு: சென்னையில் விபத்தில் சிக்கி இறந்த இதயேந்திரன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை பிறர் வாழ தானம் செய்யும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 8, 2009
விபத்தில் பலியான கல்லூரி மாணவியின் கண்கள் தானம்: தினமலர்
Posted by
Arul
at
Thursday, January 08, 2009


No comments:
Post a Comment