Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, January 5, 2009

காரைக்குடி கண்மாயில் முதுமக்கள் தாழிகள்: தினமலர்

காரைக்குடி கண்மாயில் முதுமக்கள் தாழிகள்: தினமலர்: "காரைக்குடி கண்மாயில் முதுமக்கள் தாழிகள்

ஜனவரி 05,2009,00:00 IST

காரைக்குடி : காரைக்குடி அருகே மங்கலம் கிராமத்தில் கி.மு., 5ம் நூற்றாண்டை சேர்ந்த முதுமக்கள் தாழிகள் புதையுண்டு இருப்பது தெரியவந்துள்ளது.கண்ணங்குடி ஒன்றியம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டகுடி கண்மாயின் ஒரு பகுதியில், உடைந்த மண் ஓடுகள் அதிகளவில் இருப்பதை ஆடுமேய்க்க சென்றவர்கள் சில நாட்களுக்கு முன் பார்த்தனர்.கிராமத்தினரிடையே தகவல் பரவியதால், அப்பகுதியை பார்த்து விட்டு செல்கின்றனர். மண் ஓடுகள் சிதறிக்கிடக்கும் பகுதியில்அரை கி.மீ., சுற்றளவிற்கு வெளிர்ந்த கடல் மணல் போல் காணப்படுகிறது.

கல்வெட்டு ஆய்வாளர் ராஜவேலு கூறுகையில், 'கி.மு.,5ம் நூற்றாண்டில், இறந்தவர்களை அவர்கள் பயன்படுத்திய ஆபரணம், பொருட்களுடன் பெரிய தாழியில் வைத்து புதைப்பர். இப்பகுதி இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாக இருந்திருக்கலாம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் புதைந்திருக்கலாம். மேற்பரப்பு மணல் கரைந்து வருவதால் தாழி சிதைந்து, எலும்பு கூடுகள் சிதறி கிடக்கின்றன. இப்பகுதியில் முழுமையான ஆய்வு நடத்தினால் இங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு தெரியும்' என்றார்."

No comments: