Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 8, 2009

லாரிஸ்டிரைக்:ரூ.50 கோடி நூல் தேக்கம்: தினமலர்

லாரிஸ்டிரைக்:ரூ.50 கோடி நூல் தேக்கம்: தினமலர்: "லாரிஸ்டிரைக்:ரூ.50 கோடி நூல் தேக்கம்

ஜனவரி 08,2009,00:00 IST

திருப்பூர்: லாரிகள் ஸ்டிரைக்கால் நூற்பாலைகளில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் கேஸ் பனியன் நூல் தேக்கமடைந்துள்ளது. பனியன் மற்றும் உபதொழில் சார்ந்த ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள 3,000க்கும் அதிகமான பனியன் நிறுவனங்களுக்கு துணி உற்பத்திக்கு தேவையான நூல் வெளிமாவட்டங்களில் இருந்து வாங்கப்படுகிறது. திண்டுக்கல், வேடசந்தூர், கரூர், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் பனியன் உற்பத்திக்கான நூல் மட்டுமே உற்பத்தி செய்கின்றன.தினமும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துமே நூற்பாலைகளில் இருந்து லாரிகள் மூலமாக திருப்பூர் தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.


சில மாதங்களாக பனியன் உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பனியன் மற்றும் பல்வேறு வகையான ஆயத்த ஆடைகள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக, நூற்பாலைகளில் நூல் வாங்குவதும் குறைந்துள்ளது. மின்வெட்டு காரணமாக, எட்டு மணி நேர வேலை நாள்தோறும் பாதிக்கப்படுகிறது. லாரி உரிமை யாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நூற்பா லைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல், திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு லாரிகளில் எடுத்து வர முடியாமல், தேங்கியுள்ளன.கடந்த மூன்று நாட்களில் 45 ஆயிரம் கேஸ் நூல் தேக்கம் அடைந்துள்ளது.


இதன் மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. நூற்பாலை தொழிலாளர்களும், பனியன் நிறுவன தொழிலாளர்களும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இதன் உபதொழில்களில் சாய, சலவை ஆலைகள், காம்பாக்டிங், எம்ப்ராய்டரிங், ஸ்கிரீன் பிரின்டிங், பவர்டேபிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது."

No comments: