Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 2, 2009

Kanyakumari District News, Tamil Nadu : Dinamalar News Paper Daily :கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் : : தினமலர்

Kanyakumari District News, Tamil Nadu : Dinamalar News Paper Daily :கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் : : தினமலர்: "புத்தாண்டு கோலாகலம் : களைகட்டியது கன்னியாகுமரி

கன்னியாகுமரி : புத்தாண்டு தினமான நேற்று கன்னியாகுமரியில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சுவாமி விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டுள்ளனர்.


இந்தியாவின் தென்கோடி எல்லையாகவும், சர்வதேச சுற்றுலா தலமாகவும் விளங்கும் கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். ஆண்டிற்கு 16 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்றுமாத கோடை விடுமுறை சுற்றுலா சீசனிலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் லட்சகணக்கில் வருகின்றனர்.


இது தவிர ஏனைய மாதங்களில் விழா காலம், ஓணம் பண்டிகை போன்ற காலகட்டங்களிலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற தினங்களிலும் பல்லாயிர கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சீசன் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக மாறி வரும் கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் உள்ளன. தற்போது ஐயப்ப பக்தர்களின் சபரிமலை சீசன் துவங்கியது முதல், நாள்தோறும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரியில் டிசம்பர் மாதம் 20ம் தேதிக்கு மேல் சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகளவில் காணப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததாக சுற்றுலா அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது.


புத்தாண்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று அதிகாலை சூரிய உதயத்தை காண முக்கடல் சங்கமம், பகவதிஅம்மன் கோயில் கிழக்கு வாசல், படகுதுறை பகுதியில் லட்சகணக்கான சுற்றுலா பயணிகள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டு இருந்தனர். மேலும் ஓட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல்களின் மேல் தளத்திலும் கூடியிருந்தனர். காலை 6.30 மணியளவில் செங்கதிர்களோடு உதயமான சூரிய உதயத்தை கண்டு ஐயப்ப பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர். சுற்றுலா பயணிகளும், பக்தர்களும், சூரிய பகவானை கைகூப்பி வணங்கினர். முதல் சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.


பகவதியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: புத்தாண்டின் முதல் நாளான நேற்று கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் குகநாதீஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், கொட்டாரம் நந்தவனம் போன்ற கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


டிசம்பரில் 2.5 லட்சம் சுற்றுலா பயணிகள்: கன்னியாகுமரிக்கு லட்சகணக்கான சுற்றுலா பயணிகள் வந்தாலும் அதிலும் குறிப்பிட்ட சுற்றுலா பயணிகளே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகளை பார்வையிடுகின்றனர். 2008ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகளை பார்வையிட்டுள்ளனர்."

No comments: