Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, January 12, 2009

உயர உயரப்பறக்கிறது நெல் விலை : அரிசி விலை தாறுமாறாக உயரும்: தினமலர்

உயர உயரப்பறக்கிறது நெல் விலை : அரிசி விலை தாறுமாறாக உயரும்: தினமலர்: "உயர உயரப்பறக்கிறது நெல் விலை : அரிசி விலை தாறுமாறாக உயரும்

ஜனவரி 12,2009,00:00 IST

தஞ்சாவூர் : வியாபாரிகள் போட்டி போட்டு நெல் கொள்முதல் செய்வதால் வெள்ளை பொன்னி, ஏ.டி.டி.23 ரக நெல், கிலோவுக்கு 5 முதல் 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தமிழகம் முழுவதும் சம்பா, தாளடி பயிர் சாகுபடி துவங்கியது. டெல்டா மாவட்டங்களில் 4.27 லட்சம் எக்டேர், இதர மாவட்டங்களில் 11.53 லட்சம் எக்டேர் சேர்த்து மொத்தம் 15.80 லட்சம் எக்டேரில் சம்பா சாகுபடியானது.


காவிரி பாசனப் பகுதியில் விவசாயிகள் வெள்ளை பொன்னி, ஏ.டி.டி., 43, ஆடுதுறை போன்ற சன்னரக நெல் சாகுபடி செய்திருந்தனர். 'நிஷா' புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் சில இடங்களில் மட்டும் சம்பா சாகுபடி பாதித்தது. பாசனத்திற்கு போதுமான நீர் தட்டுப்பாடின்றி கிடைத்ததால், நடப்பாண்டில் டெல்டா உட்பட மாநிலம் முழுவதும் சம்பா சாகுபடி திருப்திகரமாக முடிந்துள்ளது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை தொடர்ச்சியாக நடக்கிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக மூன்று டன் நெல் அறுவடை செய்ய முடியும். நடப்பாண்டில் டெல்டாவில் மட்டும் 36 லட்சம் முதல் 40 லட்சம் டன் நெல் அறுவடையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்தாண்டை விட இந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்வதில் கடும் போட்டி நிலவுவதால், வியாபாரிகள் கிராமங்களில் முகாமிட்டு நெல் கொள்முதல் செய்கின்றனர். அதனால், வெள்ளை பொன்னி, ஏ.டி.டி.43 ரக நெல் கிலோவிற்கு 5 முதல் 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதி வியாபாரிகள், மேட்டூர் கால்வாய் பாசனப் பகுதிகளில் நேரடியாக அறுவடை வயலுக்கே சென்று நெல் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர்.


இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: சன்ன ரக நெல்லை அரசு குவின்டால் 1,050 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யும் நெல், ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும். வியாபாரிகள் நேரடியாக களத்தில் காத்திருந்து ஈரப்பதத்துடன் கூடிய வெள்ளை பொன்னி நெல்லை வாங்குகின்றனர். கடந்த ஆண்டு 1,000 ரூபாய்க்கு விற்ற ஒரு குவின்டால் பொன்னி நெல், தற்போது 1,400 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. கடந்தாண்டை விட குவின்டாலுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் நெல்லை உலர வைக்காமல் ஈரப்பதத்துடனே விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். நெல் மட்டுமன்றி வைக்கோல், தவிடு ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஒரு ஏக்கரில் அறுவடை செய்த வைக்கோல் 3,500க்கு விற்றது. இது தற்போது 4,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. நெல் விலை அதிகரித்துள்ளதால் நடப்பாண்டில் பொன்னி அரிசி விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது."

No comments: