ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு ரயில்: தினமலர்: "ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு ரயில்
ஜனவரி 05,2009,00:00 IST
மதுரை : ''ராமேஸ்வரம்-கன்னியாகுமரி இடையே ரயில் போக்குவரத்து துவங்க பரிந்துரைக்கப்படும்'' என கோட்ட மேலாளர் அனில் சிங்கால் பேசினார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தொழில் வர்த்தக பொருட்காட்சி நிறைவு விழா மதுரை தமுக்கத்தில் நேற்று நடந்தது. தலைவர் எஸ்.ஜெயபாலன் தலைமை வகித்தார். அவர்,''அடுத்த பொருட்காட்சி டிச.,18 முதல் 2010 ஜன.,5 வரை நடைபெறும். அதன் தலைவராக நீதிமோகன் செயல்படுவார்'' என்றார்.
அனில் சிங்கால் பேசுகையில்,'' மதுரை ரயில்வே ஸ்டேஷனை நவீன முறையில் மாற்றியமைக்கும் திட்டம் உள்ளது. திருச்சி-மதுரை இடையே ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. ராமேஸ்வரம்- கன்னியாகுமரிக்கு ரயில் இயக்க பரிந்துரைக்கப்படும் '' என்றார்.
மோகன் எம்.பி.,பேசுகையில்,'' காஷ்மீர், பஞ்சாப், கேரளாவைப்போல் போல் முதற்கட்டமாக மதுரை- கொடைக்கானல் இடையே 'ஹெலிகாப்டர்' சுற்றுலாவை துவக்க வேண்டும்'' என்றார்.
தேசிய சிறுதொழில் கழக துணை பொது மேலாளர் டி.வெங்கடேஸ்வரன் டெண்டர் மார்க்கெட்டிங் முறைகள், சர்வதேச கண்காட்சி, ஏற்றுமதிக்கு வழங்கப்படும் கடன்கள் பற்றி பேசினார். முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேல், செயலாளர் ஜெகதீசன், பொருட்காட்சிக் குழு துணைத் தலைவர்கள் அழகு, தனுஷ்கோடி, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் பங்கேற்றனர். சிறந்த அரங்குகளுக்கு பரிசு வழங்கப்பட்டது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, January 5, 2009
ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு ரயில்: தினமலர்
Posted by
Arul
at
Monday, January 05, 2009


No comments:
Post a Comment