Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 9, 2009

தூத்துக்குடி வந்தது சொகுசு சுற்றுலா கப்பல்: தினமலர்

தூத்துக்குடி வந்தது சொகுசு சுற்றுலா கப்பல்: தினமலர்: "தூத்துக்குடி வந்தது சொகுசு சுற்றுலா கப்பல்

ஜனவரி 09,2009,00:00 IST

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்று 6 அடுக்குகள் கொண்ட சொகுசு கப்பல் 'ஐலண்ட் ஸ்கை' வந்தது. சுற்றுலாவிற்கு இந்தியாதான் பாதுகாப்பான நாடு என அதில் வந்த வெளிநாட்டு பயணிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் மியாமி தீவைச் சேர்ந்த சொகுசு சுற்றுலா கப்பல் 'ஐலண்ட் ஸ்கை'. அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 89 பயணிகளுடன் நேற்று முன்தினம் கொழும்பில் புறப்பட்ட அக்கப்பல் நேற்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தது.


துறைமுக துணைத்தலைவர் சுப்பையா தலைமையில் பயணிகளுக்கு நெற்றியில் திலகமிட்டு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. அதில் 72 பயணிகள் ஏஜென்சி மூலம் சொகுசு பஸ்களில் மதுரை மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மகால் அழைத்துச் செல்லப் பட்டனர். அக்கப்பல் திருவனந்தபுரம் விழிஞ்சம், லட்சத்தீவு, கொச்சி, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்கிறது.


கப்பலில் 'ஏசி'யுடன் 6 அடுக்கு கொண்ட 120 அறைகள், உணவகம், நீச்சல்குளம், பார், உயிர்காக்கும் படகுகள், 69 பணியாளர்கள் உள்ளனர். கேப்டன் வன் ஸ்னோர்பின் ஜெர்மனைச் சேர்ந்தவர்.இங்கிலாந்து பயணிகள் கன் னோர், பிஸ்க் கூறுகையில்,' இந்தியாவின் பல இடங்களை சுற்றுப் பார்த்துள்ளோம். மும்பை தாக்குதலால் இந்திய சுற்றுலாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் உலகில் எல்லா நாடுகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கின்றன. சுற்றுலாப்பயணிகளுக்கு இந்தியாதான் பாதுகாப்பான நாடு. இந்தியாவையும், மக்களின் கலாச்சாரத்தையும் நேசிக்கிறோம்' என்றனர்.


தனி கப்பல் தளம்: தூத்துக்குடி துறைமுக துணைத்தலைவர் சுப்பையா கூறும்போது,' சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி துறைமுகத்தில் சுற்றுலா கப்பல்களை நிறுத்த தனி தளம் அமைக்கப்படவுள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி உட்பட 6 தென்மாவட்ட சுற்றுலா தளம் குறித்த கருத்தரங்கம் துறைமுகம் சார்பில் நடத்தப்படவுள்ளது. அதில் சம்மந்தப்பட்ட கலெக்டர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்' என்றார்."

No comments: