Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 6, 2009

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்: லாரி ஸ்டிரைக்கை சமாளிக்க யோசனை

ஜனவரி 06,2009,00:29
'அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் ஒப்புதலையும் பெற வேண்டியுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாளிக்க ஒரு நெருக்கடி கால செயல் திட்டத்தை தயாரிக்கும்படியும் அதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளு மாறும் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தம் குறித்து டில்லியில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக செயலர் பரம் தத் நேற்று கூறியதாவது: அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சம்மேளனத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் பலவும் ஏற்புடையதாக இல்லை. கோரிக்கைகளில் பல மாநில அரசுகள் சம்பந்தப்பட்டுள்ளன. மத்திய அரசு தனித்து எந்த முடிவும் எடுத்துவிட முடியாது.டீசல் விலையை குறைப்பது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. விற்பனை வரியை நீக்கும்படியும் வாட் வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரும் படியும் கோருகின்றன. ஏற்கனவே மாநிலத்துக்கு மாநிலம் வாட் வரி விதிப்பு முறை மூலம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் வேறுபடுகின்றன. எனவே, இதில் உடனடியாக ஒருமுடிவுக்கு வந்துவிட முடியாது. நேஷனல் பர்மிட் வழங்குவதற்கு தற்போது 5,000 ரூபாய் வரை மாநில அரசுகளால் வசூலிக்கப்படுகின்றன. இதை, 1,500 ஆக குறைக்கும்படி கோருகின்றனர் அல்லது 12 ஆயிரத்துக்கு உயர்த்தி நாடு முழுவதும் பர்மிட் வழங்கவும் கோருகின்றனர். இவற்றுக்கெல்லாம் மாநில அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. சாலை வரி விதிப்பை முற்றிலுமாக நீக்கும்படி கோருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி கடந்த ஆறு மாதங்களாக சாலை வரி வசூலிப்பதை அரசாங்கத்தால் அமைத்த தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைத்துள்ளோம். இந்நிலையில் வரியே வசூலிக்கக் கூடாது என்பதை எப்படி ஏற்க முடியும். தற்போது எழுந்துள்ள சூழ்நிலையை சமாளிக்க மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நெருக்கடி கால செயல்திட்டத்தை தயாரிக்கும்படியும் அதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பால், பழங்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பரம் தத் கூறினார்."

No comments: