Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, January 12, 2009

விவேகானந்தர் நினைவு மண்டபம் : இம்மாத இறுதியில் திறக்க முடிவு: தினமலர்

விவேகானந்தர் நினைவு மண்டபம் : இம்மாத இறுதியில் திறக்க முடிவு: தினமலர்: "விவேகானந்தர் நினைவு மண்டபம் : இம்மாத இறுதியில் திறக்க முடிவு

ஜனவரி 12,2009,00:00 IST

ராமேஸ்வரம் : சுவாமி விவேகானந்தரின் பெருமைகளை விளக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபத்தை இம்மாத இறுதியில் திறந்து வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்த சுவாமி விவேகானந்தருக்கு இன்று(ஜன., 12) பிறந்த நாள்.


1893ம் ஆண்டில் விவேகானந்தர் ராமநாதபுரம் வந்தபோது இவரிடம் மிளிர்ந்த புலமை, சாஸ்திர ஞானத்தை கண்டு வியந்த மன்னர் பாஸ்கர சேதுபதி, அமெரிக்கா சிகாகோ நகரில் நடந்த சர்வமத பேரவையில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா சென்ற விவேகானந்தர், நான்கு ஆண்டு கழித்து இலங்கை வழியாக பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் வந்திறங்கினார். ராமேஸ்வரம் சென்ற விவேகானந்தர் ராமநாதசுவாமியைத் தரிசித்து சேதுபதி மன்னருக்குச் சொந்தமான விவேகானந்த பாஸ்கரம் மாளிகையில் தங்கினார்.


சுவாமி விவேகானந்தர் வந்து சென்ற வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் உட்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. சோழர் காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய பாம்பன் குந்துகால் கடற்கரையில் மத்திய சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம், ராமேஸ்வரத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் விவேகானந்த-பாஸ்கரம் மாளிகை புதுப்பிக்கப்பட்டு தியான மண்டபமும் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு இடத்திலும் விவேகானந்தர் மற்றும் பாஸ்கர சேதுபதியின் சிலைகள், கண்காட்சியகம், அனைத்து மொழி வரலாற்று நூலகம் அமைக்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் புகழை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபங்களின் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இம்மாத இறுதிக்குள் இதைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது."

No comments: