Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, January 5, 2009

நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் ஓடாது! : அரசுடன் நடந்த பேச்சு தோல்வி: தினமலர்

நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் ஓடாது! : அரசுடன் நடந்த பேச்சு தோல்வி: தினமலர்: "நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் ஓடாது! : அரசுடன் நடந்த பேச்சு தோல்வி

ஜனவரி 05,2009,00:00 IST

புதுடில்லி : மத்திய அரசுடன் லாரி உரிமையாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, திட்டமிட்டபடி நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது. நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதையடுத்து, பொருட்கள் தட்டுப்பாடு இனி அதிகரிக்கும்.


'டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும். சேவை வரியை திரும்ப பெற வேண்டும். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு, எந்தவித இடையூறும் இல்லாமல் சரக்கு ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லாரி உரிமையாளர் சங்கம், இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. மத்திய அரசு அதிகாரிகள், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.


இந்நிலையில், கடைசி கட்ட முயற்சியாக லாரி ஸ்டிரைக்கை நிறுத்துவதற்கு மத்திய அரசு நேற்று முயற்சி மேற்கொண்டது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை பல மணி நேரம் நீடித்தும், எந்தவித சுமுகமான முடிவும் ஏற்படவில்லை. இதையடுத்து, திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் துவங்கும் என மோட்டார் சங்கம் அறிவித்தது.


அகில இந்திய மோட்டார் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எங்களை பேச்சுவார்த்தைக்காக அழைத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரம்ம தத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் துவங்குகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோட்டார் சங்க செய்தி தொடர்பாளர் குப்தா கூறுகையில், 'எங்களின் குறிப்பிட்ட சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக கடந்தாண்டே அரசு தெரிவித்தது. இது தொடர்பாக, இரு தரப்புக்கும் இடையே கடந்தாண்டு ஜூலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் அரசு இதை நடைமுறைப் படுத்தவில்லை. இதனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றார்.


இந்த வேலை நிறுத்தத்தில், நாடு முழுவதும் உள்ள 40 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் கலந்து கொள்கின்றன. தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் லாரிகள் பங்கேற்கின்றன. இதனால், அரிசி, காய்கறிகள்,மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு வர வேண்டிய பொருட்களும் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கன்னியாகுமரியில் இருந்து கேரளத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல, நேற்று மாலையில் ஆர்டர் ஏதும் எடுக்கவில்லை. அதே போல, நாமக்கல் பகுதியில் முட்டைகள் கொண்டு செல்வதிலும் தடை ஏற்பட்டிருக்கிறது.


தமிழகத்தில் பாதிப்பு எவ்வளவு: லாரி ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, காய்கறி விலை உயர்வு, பண முடக்கம், தொழிலாளர்கள் வேலையிழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் லாரிகள், ஆங்காங்கே ஸ்டாண்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. லாரி புக்கிங் ஏஜென்ட்கள், கடந்த சில நாட்களாகவே வெளியூர்களுக்கு புக்கிங்கை நிறுத்தி விட்டனர். அவை மட்டுமின்றி, ரயில்களில் வரும் சரக்குகள், கப்பலில் இருந்து வரும் சரக்குகள் கொண்டு வரமுடியாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. .இது குறித்து தமிழக லாரி உரிமையாளர் சம்மேளன செயலர் பழனிசாமி கூறுகையில், லாரி ஸ்டிரைக்கால், பொதுமக்கள் மட்டுமின்றி, லாரி தொழிலை நம்பியுள்ள பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கும். சேலம் மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் பேர் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது; தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் லட்சம் டன் கணக்கில் பொருட்கள் தேக்கமும், தினசரி ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். மேலும், நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. நாளொன்றுக்கு மூன்று கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகளை விற்பனைக்கு வெளியூர், வெளி மாநிலம் கொண்டு செல்ல முடியாததால், முட்டைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது."

No comments: