Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 8, 2009

ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: தினமலர்

ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: தினமலர்: "ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு

ஜனவரி 08,2009,00:00 IST

திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவ ராப்பத்து திருநாளின் முதல் நாளான நேற்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் 27ம் தேதி ஏகாதசி மஹோத்ஸவம் பகல்பத்து திருநாளுடன் துவங்கியது. ஜனவரி ஆறாம் தேதி வரை நடந்த பகல்பத்து திருநாட்களில் ஸ்ரீநம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் அனைத்து ஆழ்வார்கள், ஆசாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதித்தார். பகல்பத்து 10ம் திருநாளில் ஸ்ரீநம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார்.

ராப்பத்து திருநாளின் முதல் நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில், கும்ப லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீநம்பெருமாள் ரத்தினங்கள் நிறைந்த அங்கி அணிந்து, மெல்லிய வெள்ளி சல்லா துணியை இடுப்பில் உடுத்தி, தோளில் அழகிய கிளிமாலையும், தலையில் பாண்டியன் கொண்டையும் மின்னியவாறு புறப்பாடாகி, மூலஸ்தானம் அடுத்த காயத்திரி மண்டபம் வந்து சந்தனு மண்டபம் வழியாக ராஜமகேந்திரன் சுற்றுக்கு வந்தார். மூலஸ்தானத்தை வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக தங்ககொடிமரத்தை சுற்றி, மூன்றாம் பிரகாரமான குலசேகரன் சுற்று வழியாக 'விரஜா நதி' தீர்த்த மண்டபத்தை வந்தடைந்தார். தொடர்ந்து, சொர்க்க வாசல் கதவுகளுக்கு முன் ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை 4.50 மணியளவில் வந்தார். துவாரபாலகர்கள் அனுமதி கிடைத்தவுடன் சரியாக 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீநம்பெருமாள், அவருடன் ஜீயர் சுவாமிகள் முன் செல்ல, பக்தர்கள், 'ரெங்கா, ரெங்கா' என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சொர்க்க வாசலை கடந்து சென்றனர்.

காலை 8.15 முதல் மாலை 6 மணி வரை பொதுஜன சேவை நடந்தது. இரவு 10 மணி வரை பரமபதவாசல் திறந்திருந்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மனைவி சென்னம்மாள், மகன்கள் பாலகிருஷ்ணா, ரேவண்ணா, முன்னாள் மத்திய அமைச்சர் பாலசுப்பிரமணியன், திருச்சி மேயர் சாருபாலா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



சொர்க்க வாசல் திறப்பு: 2008ல் இல்லை: கடந்த 2007 டிச., 21ம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் 2009 ஜன.,7 நேற்று சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. 2008ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு நடக்கவில்லை. நேற்று சொர்க்க வாசலை கடந்து ஸ்ரீநம்பெருமாள் வெளியே வந்ததும் லேசான மழை பெய்ததும் குறிப்பிடதக்கது."

No comments: