Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 9, 2009

லாரி ஸ்டிரைக்கால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு : தினமலர்

லாரி ஸ்டிரைக்கால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு : தினமலர்: "லாரி ஸ்டிரைக்கால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு

ஜனவரி 09,2009,00:00 IST

லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம், எண்ணெய் நிறுவன அலுவலர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நான்கு நாளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் தொடருமானால் பொதுமக்களின் வாழ்க்கை ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், டீசல் ரூ.35.59 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும். வாட் வரியில் 4 சதவீதம் குறைக்க வேண்டும். டயர் விலையில் 35 சதவீதம் குறைப்பு, தேசிய அனுமதி வரியை ரூ.5,000ல் இருந்து ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நான்கு நாட்களாக லாரி ஸ்டிரைக் நீடித்து வருகிறது.


இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்தியா முழுவதும் பெரும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு லாரி தொழில் மூலம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நான்கு நாட்களில் மட்டுமே 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாநிலம் விட்டு மாநிலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பொருட்கள் குடோன்களில் முடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் வர்த்தக பரிவர்த்தனை ஸ்தம்பித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பெரும்பாலான பெட்ரோல் 'பங்க்'களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. டேங்கர் லாரி, சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் 'பங்க்'களில் வைத்து இருந்த 'ஸ்டாக்' தீர்ந்ததின் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக புல்லட் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கருப்பூர் காஸ் பாட்டலிங் பிளான்ட்டில் கையிருப்பு உள்ள காஸ் சிலிண்டர்கள் மட்டுமே நிரப்பி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படாத பட்சத்தில் 'காஸ்' தட்டுப்பாடு ஏற்படும். சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்ட பொருட் கள் லாரிகளில் ஏற்றி வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கியுள்ளது. அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல், காஸ் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


50 லட்சம் பேர் வேலையிழப்பு: தமிழகத்தில் ஒன்றரை லட்சம் லாரிகளும், மினி லாரி, சரக்கு வேன் என ஒரு லட்சம் வாகனங்களும் இயங்கி வருகின்றன. லாரி தொழிலில் நேரடியாக 10 லட்சம் பேரும், மறைமுகமாக 40 லட்சம் பேர் என மொத்தம் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தமிழகத்தில் லாரி தொழில் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், நான்கு நாட்களில் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு வர்த்தகத்தின் மூலம் 33 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று வரை ரூ.100 கோடி வர்த்தக பாதிப்பு ஏற் பட்டுள்ளது. நான்கு நாளாக நடந்து வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக லாரி தொழிலை நம்பி வேலை பார்த்து வந்த 50 லட்சம் பேருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள் ளது."

No comments: