Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 9, 2009

இன்று காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு: தினமலர்

இன்று காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு: தினமலர்: "இன்று காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு

ஜனவரி 09,2009,00:00 IST

திருமங்கலம்: திருமங்கலத்தில் இன்று (ஜன. 9) காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,'இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. ஆனால் அதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கும். அதில் ஓட்டுப்பெட்டியில் முன்கூட்டியே ஓட்டுக்கள் பதிவு வைக்கப்பட்டுள்ளனவா, அல்லது தங்களது சின்னத்திற்கு ஓட்டுப்போட்டால் வேறு சின்னத்திற்கு ஓட்டுக்கள் பதிவாகுமா? போன்ற சந்தேகங்களை வேட்பாளர்கள் தீர்த்துக்கொள்ளலாம்.மேலும் பலத்த பாதுகாப்புகளுடன் தேர்தல் நடக்கும் என்பதையும், மக்கள் பாதுகாப்பாக ஓட்டளிக்கலாம் என்பதையும் நேற்று நாளிதழ்களில் விளம்பரங்கள் மூலம் அறிவித்துள்ளோம். எனவே மக்கள் தைரியமாக ஓட்டுப்போட முன்வர வேண்டும் என்றார்."

No comments: