ஊழல் புகார் வழக்கு அபராத வசூல் ரூ. 46 கோடி: தினமலர்: "ஊழல் புகார் வழக்கு அபராத வசூல் ரூ. 46 கோடி
ஜனவரி 02,2009,00:00 IST
புதுடில்லி : ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து, கடந்த ஆண்டு 46 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள் ளது மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம். மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி.,) செயல்திறன் அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் வரை 1,194 வழக்குகளில் அபராதம் விதிக்கும்படி சி.வி.சி., அறிவுறுத்தியது. இதில், 562 வழக்குகளில் பெரிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டது. 133 புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குகளில் நடத்தப் பட்ட விசாரணைக்குப் பின், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து 46 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் ஐந்து பேர், மத்திய நேர்முக வரிகள் ஆணைய அதிகாரிகள் மூன்று பேர், மத்திய கலால் மற்றும் சுங்க ஆணைய அதிகாரிகள் இருவருக்கு எதிராக சி.வி.சி., விசாரணையை துவக்கி யது.
ரயில்வே அதிகாரிகள் 20 பேர், பொதுத் துறை வங்கி அதிகாரிகள் 29பேர் உட்பட 91 அதிகாரிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டு, அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. சி.வி.சி.,யின் அறிவுறுத்தலின் பேரில், இணைச் செயலர் அந்தஸ்துக்கு மேற்பட்ட ஐந்து மூத்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர். இவ்வாறு செயல்திறன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, January 2, 2009
ஊழல் புகார் வழக்கு அபராத வசூல் ரூ. 46 கோடி: தினமலர்
Posted by
Arul
at
Friday, January 02, 2009


No comments:
Post a Comment