Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 2, 2009

ஊட்டி மலையில் ஊர்ந்த வெள்ளை ரயில் : சுற்றுலா பயணிகள் உற்சாகம்: தினமலர்

ஊட்டி மலையில் ஊர்ந்த வெள்ளை ரயில் : சுற்றுலா பயணிகள் உற்சாகம்: தினமலர்: "ஊட்டி மலையில் ஊர்ந்த வெள்ளை ரயில் : சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஜனவரி 01,2009,23:55 IST

மேட்டுப்பாளையம் : ஊட்டி மலைரயில் நூற்றாண்டு விழா கண்காட்சியில் இடம்பெற்ற, வெள்ளை நிற ரயில் பெட்டிகளில் நேற்று சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் திட்டம் துவங்கி 110 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சிறப்புவாய்ந்த ஊட்டி மலை ரயிலை பாரம்பரிய சின்னமாக 'யுனஸ்கோ' அமைப்பு அறிவித்து, உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்துள்ளது. இந்த ரயில் பெட்டிகளுக்கு நீல நிறமும், இன்ஜினுக்கு கருப்பு- நீலநிறமும் உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாகவே ரயில்வே நிர்வாகம் இதே நிற பெயின்ட் அடித்து வருகிறது. குன்னூர் - ஊட்டி ரயில்பாதை துவங்கி, 100 ஆண்டுகளானதை அடுத்து, கடந்த மாதம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக, மலை ரயில் பெட்டிகளுக்கு வெள்ளை நிற பெயின்டும், இன்ஜினுக்கு மஞ்சள் பெயின்டும் அடித்து கண்காட்சிக்கு வைத்தனர்.


புத்தாண்டு தினமான நேற்று, மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளை நிற பெட்டிகள் மற்றும் மஞ்சள் கலர் இன்ஜினுடன் ஊட்டிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதில், எட்டு வெளிநாட்டு பயணிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். மேட்டுப்பாளையம் ரயில்வே பொறியாளர் ஆண்டோ பாபு ஜோசப் கூறுகையில், ''குன்னூர் - ஊட்டி ரயில் பாதை நூற்றாண்டு விழாவுக்காக மூன்று பெட்டிகளுக்கு வெள்ளைக் கலரும், இன்ஜினுக்கு மஞ்சள் பெயின்டும் அடித்து கண்காட்சியில் வைக்கப்பட்டது. இன்று (நேற்று) முதல் வெள்ளை பெயின்ட் அடித்த பெட்டிகள் சுற்றுலாப் பயணிகள் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு இருந்தால், இதே பெட்டிகள் இயக்கப்படும். எதிர்ப்பு இருந்தால், பழைய பெட்டிகள் இயக்கப்படும்,'' என்றார்."

No comments: